
- ஷெல் சில்வர்ஸ்டீன்
சிறுவன் சொன்னான், “சில நேரங்களில் நான் எனது கரண்டியைத் தவற விட்டுவிடுகிறேன்.”
முதியவர், “நானும் அதைச் செய்கிறேன்” என்றார்.
“நான் உறக்கத்தில்
என் உடையை நனைத்து கொண்டுவிடுகிறேன்.”
சிறுவன் கிசுகிசுத்தான்.
“நானும் அதைச் செய்கிறேன்”என்று சிரித்தார் முதியவர்.
“நான் அடிக்கடி அழுகிறேன்” என்றான் சிறுவன்.
முதியவர்,”நானும் அப்படித்தான்”என்று ஆமோதித்தார்.
“ஆனால் இவை எல்லாவற்றையும் விட மோசமானது,வளர்ந்த
பெரியவர்கள் என்னை பொருட்படுத்தவே மாட்டார்கள்.”என்று சொன்ன சிறுவன்
சுருக்கங்கள் நிறைந்த ஒரு முதுமையான கையின் வெதுவெதுப்பை உணர்ந்தான்.
”நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரிகிறது” என்றார் அச் சிறிய முதியவர்.
