மழையும் வெயிலும்/அழகியசிங்கர்

உனக்கு
வெயில் பிடிக்குமா
மழை பிடிக்குமா
இரண்டுமே
மழை அதிகமாக
பெய்தால்
பிடிக்காது
அதேபோல் வெயில்
அதிகமாகக் கொளுத்தினால்
பிடிக்காது
கொஞ்சம் மழை
கொஞ்சம் வெயில்
என்றால்
பிடிக்கும்
நாம் நினைப்பது
போலில்லாமல்
நிறையா மழை
நிறையா வெயில்
ம்ம்ம்