ஒவ்வொரு வெயிற் காலம் /தமிழச்சி தங்கபாண்டியன்

கடுமையான வசவுடன்
கால் பொசுக்க
வாசல் கூட்டும் பொம்மக்காவைப் போய்
கால் சுற்றும் பூiனாயய்க்
கொஞ்சுகிறது இந்த வெயில்

திண்பதற்கு என்ன வாங்கி வந்தாய்
என்று ஓடி வரும் குழந்தைகளிடம்
எப்படிக் கொடுப்பது
சில்லுக் கருப்பட்டியில் உருகி ஓடும் வெயிலை??

ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும்
வெயில் கொளுத்தும்
என் கிராமத்துக்குப் போகிறேன் நான்
வியர்வை, வெட்கை, புழுக்கம் என
வெயிலுக்கான அர்த்தத்தினை
இனையதள அகராதியில்
அறிந்துகொள்கிறாள ;என ;மகள்