ஓஷோவும், பாரதியும்/ செந்தூரம் ஜெகதீஷ்

2022/29 இலக்கியம் மற்றும் ஆன்மீகத்தின் இருபெரும் சிகரங்கள் கம்பனும் ஓஷோவும்.கூடவே பாரதியும் கண்ணதாசனும் போதும்.

வேறு எதுவுமே படிக்க வேண்டாம்.பல ஆயிரம் நூல்கள் படித்த அனுபவத்தில் இதை சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நான் முழுவதும் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனக்கு முக்கியம்தான். முழுவதும் வாசிக்காமல் தூக்கி போட்ட நூல்களும் பல ஆயிரம் தான்.ஒரு நூலின் ஏதோ ஒரு அம்சம் என் அக உலகை செம்மைப்படுத்தினால்தான் முழுவதும் வாசிக்கிறேன். அதைப் பற்றி நாலுவரி எழுதுகிறேன். நிறைய புத்தகங்களுடன் தான் எனது தினசரி வாழ்க்கை கழிகிறது.புதிதும் பழசுமாக பல நூல்கள் தினமும் என் படிக்கும் அறையில் நிரம்புகின்றன. பத்து புத்தகங்கள் படித்து ஒன்றை தேர்வு செய்து அதைப்பற்றி எழுதுகிறேன்.

சிலவற்றை பிறகு எழுதலாம் என்று எடுத்து வைக்கிறேன். சிலவற்றை படித்து யாருக்காவது கொடுத்து விடுகிறேன். சில நாட்களுக்கு முன் நண்பர் அழகியசிங்கர் Chandramouli Azhagiyasingar அவர்களை அவர் வீட்டுக்கு போய் சந்தித்து பேசினேன்.அப்போது நகுலன் ஞானக்கூத்தன் அசோகமித்திரன் குறித்த புத்தகங்கள் தமது இரண்டு சிறுகதை நூல்கள் ஆகியவற்றுடன் தாம் பதிப்பித்த நூல்களையும் கொடுத்தார்.

மிகக்குறைந்த விலைக்கு. இவற்றை படித்து பதிவு செய்ய வேண்டும். மின்ஹா Fathima Minha வின் இரண்டாவது கவிதை நூலுக்கு அழகாக மதிப்புரை எழுத வேண்டும். க்ருஷ்ண லக்ஷ்மி யின் மோகப் பரல்களை வாசகர்கள் மத்தியில் சிறப்பாக அறிமுகம் செய்ய வேண்டும். கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பாளர் நண்பர் தசரதன் தந்து விட்டு போன இரண்டு புதிய நூல்கள் ஷாராஜ் பா.ராகவனின் புதிய புத்தகங்கள் வாசிக்க வேண்டும்…

இதனால் பழைய புத்தகங்கள் வாங்குவதைத் தவிர்க்க நேருகிறது.ஆனாலும் எப்போதும் சில நல்ல புத்தகங்களை வாங்காமல் இருக்க முடியாது .சமீபத்தில் டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட்,அரிஸ்டாட்டில், ஒஷோ,எர்ணஸ்ட் ஹெமிங்வேயின் முழு சிறுகதை தொகுப்பு உள்பட இருபது முப்பது நூல்கள் என் மேஜை மீது காத்திருக்கும். படம் பார்ப்பதை குறைத்து படிப்பதை வேகப்படுத்த வேண்டும். கடந்த ஜனவரி மாதத்தில் 15 படங்கள் பார்த்து 17 புத்தகங்கள் முழுவதும் வாசித்து விட்டேன். கழித்து கடையில் போட்ட புத்தகங்கள் மூலமாக ₹2300 கிடைத்தது.