தவளைதான் என்றாலும்/ வண்ணதாசன்

ஒரு அடர் பனிக் காலத்தில் சாகக் கூடாது.

அதுவும் இப்படி ஒரு கேசரி நிறப் பூ வயலுக்கும் சாலைக்கும் இடையில்.

வெயிலில் உலர்த்துவதாக கண்களின் அரைச் செருகுப் பிதுங்கல்.

அடுத்த நொடிக் குதிப்புக்கு ஊன்றிய முன்கால்கள்.

எப்போதுமான தவசி முறுவல்.

பாடம் செய்யப்பட்டது போல , யாரும் தாண்டிப் போகும் அப்படியேயுடன்.

இறப்புக்குரிய குறைந்தபட்ச இரக்கத்தைக் கூட அடையாமல்

இறந்துபோவது எவ்வளவு பெரிய துயரம்.
%
2019