அன்பு/செ.புனிதஜோதி

நதியோடு
வளைந்தும்…
நெளிந்தும்…
இடம் விட்டு நகராத
நாணல்கள்…

அடிப்பட்டேக்
கிடக்கும்
கூழாங்கற்கள்…

மேகங்கள் துரத்தியும்
விலகாத வானம்…

அலை அழைத்துச்
செல்லும் நம்பிக்கையில்
காத்திருக்கும் மணல்கள்…

இவை
அன்பிற்காய் ஏங்கும்
ஜீவன்களின் சாயல்.

5 Comments on “அன்பு/செ.புனிதஜோதி”

  1. மணல்…..சொல்லுக்குப் பன்மை பெரும்பாலும் எழுதுவதில்லை
    மணல்கள்… வருமா. என்பது சற்றே ஐயப்பாடு.

    அடிபட்டேக் கிடக்கும் கூழாங்கற்கள் தான் சரி என எண்ணுகிறேன்.
    அடப்பட்டேக்….ஒன்றுப் பிழை என நினைக்கிறேன்…. சரி பாருங்கள்..மா

  2. மணல்…..சொல்லுக்குப் பன்மை பெரும்பாலும் எழுதுவதில்லை
    மணல்கள்… வருமா. என்பது சற்றே ஐயப்பாடு.

    அடிபட்டேக் கிடக்கும் கூழாங்கற்கள் தான் சரி என எண்ணுகிறேன்.
    அடப்பட்டேக்….ஒற்றுப் பிழை என நினைக்கிறேன்…. சரி பாருங்கள்..மா

Comments are closed.