சூதாடுபவனின் ஓர் அழகிய பாடல்/ வசந்ததீபன்

முகமூடிகள் நிறைய இருக்கின்றன
முகங்கள் யோசிக்கின்றன
பெளர்ணமி வருகிறது
புத்தரைப் தேடுகிறேன்
காணாமல் போகிறது
பொன் நிலா
தொலைத்து விட
நேரம் பார்க்கிறேன்
கட்டிக்கொண்டு
பிரியாமல் அடம் பிடிக்கிறது
தனிமையிடமிருந்து
தப்பிக்க
காடு மேடெல்லாம் அலைகிறேன்
அவமானப்பட்டேன்
ஆத்திரப்பட்டேன்
நனைந்த தீக்குச்சியல்ல நான் சிறகுகளை முறித்தீர்கள்
கால்களை துண்டித்தீர்கள்
என் மனம்
நடக்கிறது… பறக்கிறது…
முளைப்பது முளைக்கட்டும்
பறப்பது பறக்கட்டும்
விதைத்தபடி நடக்கிறேன்.

🦀