நமக்கிடையேயான
தொலைவு/அதங்கோடு அனில்குமார்

நாம்
கரம் குலுக்கும் நொடியில்
நம் மனங்கள்
இணைகோடுகளாகின்றன.

நாம்
செய்துவைக்கும்
புன்னகைகள்
நம்
அக இருட்டுக்குள்
தொலைகின்றன.

நாம்
தோளுரச
நடக்கும் நேரம்
உள்ளுக்குள் உதிக்கும்
பதிலற்ற கேள்விகள்.

பரஸ்பர
நம்பிக்கைகளை
காலடியில் புதைத்துவிட்டு
பயணிக்கிறோம்.

இயல்பாய்
ஒரு
புன்னகை பூக்க
தோற்றுப்போகும்
ஒவ்வொரு கணமும்
நமக்குள்
எழுதிக் கொள்கிறோம்
யாரும்
யாருக்காகவும் இல்லை.