இலக்கிய இன்பம் 33/கோவை எழிலன்

மரம் எலாம் கற்பகம்

சீவக சிந்தாமணியில் வரும் இயற்கை வருணனை இது. விமலையார் இலம்பகத்தில் சீவகன் தன் தாயின் அறிவுரைக்கேற்ப ஏமாங்கத நாட்டிற்கு செல்லும் வழியில் காட்டு வளத்தைக் காண்கிறான்.

அங்கு உள்ள மலைகளில் இருக்கும் அருமணிகள் வரையாடுகளால் மிதிபட்டு துகள்களாகி காற்றில் அருவியென கீழே விழுகின்றன. அக்காட்சி இந்திரலோகமே உளுத்து பூமியில் விழுவது போல் இருக்கிறது.

அத்துகள்கள் படிந்த காட்டு மரங்கள் தேவலோகத்து கற்பக மரம் போல் ஜொலித்தது. இந்த அழகான வருணனை கொண்ட பாடல் இது.

“அண்ணலங் குன்றின்மேல்
வருடைபாய்ந் துழக்கலின்
ஒண்மணி பலவுடைந்
தொருங்கவை தூளியாய்
விண்ணுளு வுண்டென
வீழுமா நிலமிசைக்
கண்ணகன் மரமெலாங்
கற்பக மொத்தவே”