இலையுதிர் காலம்/வசந்ததீபன்

வேப்ப மரங்கள்
வரிசை வரிசையாய்
ஏனோ தானோவென்று
நின்று இருக்கின்றன
ஓடுகள் பிரிக்கப்பட்டு
துருப்பிடித்த
பூட்டுகளும் கதவுகளுமாய்…
பண்டகசாலைகள்
கருவேல முட்கள்
சூழப்பட்டு இருக்கின்றன
கருவாட்டுச் சிப்பங்களை
இறக்கி
ஏலக்காய் மூடைகளை மட்டும்
ஏற்றிச் செல்லும்
அந்த ரயில் வண்டி
தண்டவாளங்களோரம்
மல நாற்றத்தைச் சகித்துக் கொண்டு
சவத்தேராய் போகும்
ஓட்டுநர்கள் ஒரு சிலரும்
பரிசோதகர் பயணிகள் என
ஒரு சிலரும்
அதில் பயணிக்கிறார்கள்
பாரத்தாலும்.. பசியாலும்.. களைப் பாலும்..
கழுத்துப் புண் வலியுமாய்…
முனங்கிக் கத்திச் செல்லும்
எலும்பு மாடாய்
அசைந்து நகருது
அந்த இரும்புப் புழு.

🦀