அவன்/புஷ்பால ஜெயக்குமார்

பறவையின் கிரீச் ஒளி 

இரவை விழிக்க வைத்தது

இயற்கையின் கருனை 

கேட்பாரற்று வீணாகிக் கொண்டிருந்தது

உறக்கமற்ற மனிதனை 

நினைவுகள் கொன்று கூறு போட்டது 

இருளில் மறைந்த உலகத்தின் 

ஓரத்தின் ஓரத்தில் அவன் இருந்தான் 

விடிந்தால் அவனுக்கு விடுதலை 

நகரத்தின் மேல் 

ஒளிர்ந்த நிலவின் ஒளியை

உடனடியாக பார்த்து முடித்தான் 

இருளில் யார் துணையுமின்றி 

இருந்த அவன் 

சிகரெட்டை பற்ற வைத்தான் 

கொஞ்சம் கொஞ்சமாக 

அவன் அமைதியை நோக்கிப் போனான் 

பிறகு யார் என்று 

அவனுக்குத் தெரிய வரும்போது 

அவன் கன்னை மூடிக்கொண்டான்