
வயலில் நெல்லும்
வரப்பில் புல்லும்
கோவில் மதிற்சுவர்
இடையில் அரசும், ஆலும்
தோட்டத்தில்
பலவண்ணத்தில் பூக்கும்
பூச்செடிகள்
ஆற்றுக்குப் போகும் பாதையில்
நெருஞ்சி முட்கள்
தொட்டால் சிணுங்கி
தும்பைப் பூ செடிகள்
குளத்தில் கோடி தாமரை மலர்கள்
துளசி வனம்
விலவ மரம்,
மா, பலா, வாழை மரங்கள்
சந்தனக் கட்டை, சவுக்குக் கட்டை
இன்னும் பெயர் தெரியாத
தாவரங்கள் பிரபஞ்சம் முழுதும்
பிறந்து
அலட்டிக் கொள்ளாமல்
வாழ்ந்து
இயற்கை தனக்களித்த
வாய்ப்பை வீணாக்காமல்
வீண் ஆசை இல்லாமல்
அமைதியாகத் தன்னைத் தந்து
மடிகிறது
இதைப் பார்த்த
மனிதனுக்குப்
பொறாமை, கோபம் வருகிறது
இயற்கையை
எதிர்க்கிறான் எரிக்கிறான்
ஆணவத்தால் கொக்கரிக்கிறான்
முடிவில்
அவனை அவனது
ஆசைத் தீயே
எரித்து
சாம்பலைக் கரைக்கத்
தவிக்கிறது
அன்பு நதியைத் தேடி.
(10.02.2022 22.41 pm )
