இன்றைய தினமலர் இதழில்/அழகியசிங்கர்

துளி – 242


அப்பாவின் அறை என் சிறுகதைத் தொகுப்பிற்குத் தினமலரில் குறிப்புகள் வந்திருக்கிறது.  அது குறித்து சையது விமர்சனம் எழுதி உள்ளார். வாசிப்பு, வயோதிகம், இழப்பு, ஆற்றாமை, தாபம் என்ற வரி ஒன்றை  என் கதைகளைப் படித்துவிட்டு எழுதி உள்ளார்.  மிகச் சரியாகக் கணித்துள்ளார் என்று நினைக்கிறேன். இந்தக் குறிப்புகளை எழுதிய சையதிற்கு என் நன்றி.  வெளியிட்ட தினமலருக்கும் நன்றி.  தினமலரில் வந்த விமர்சனம் இதோ:

அப்பாவின் அறை ஆசிரியர்: அழகியசிங்கர் வெளியிடு: விருட்சம் பதிப்பகம், சென்னை .அப்பாவின் அலைபேசி: 94441 13205அறை பக்கம்: 106 விலை : ரூ.100 படிக்க மிக எளிதாக பதிமூன்று சிறுகதைகள் தொகுத்து ந நூலாக்கப்பட்டுள்ளது. வாசிப்பு, வயோதிகம், இழப்பு, ஆற்றாமை, தாபம் போன்ற உணர்வுகளை இந்தக் கதைகளின் வழியே கடத்தி உள்ளார். இதில் பெரும்பாலானவை, வயது பழுத்தோரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.


எண்பதைக் கடந்த தந்தை சைக்கிளில் கிளம்பும் போது ஏற்படும் பதற்றம், அன்றாட தேவைகளை சுயமாய் பூர்த்தி செய்ய முடியாமல் படுக்கையாய் கிடக்கும் தந்தையின் பிடிவாதம், அவமானம், பரிதவிப்பைக் கண்டு மனசுக்குள் கசங்கும் மகனின் நிலையையும் கதையில் பார்க்கலாம்.


இதைப்போலவே, இயலாமையால் ஏற்படும் சந்தேகம் ; தம்பியைப் பறிகொடுத்த பெண்ணின் சோகம் ; வாசிக்கப்படாத புத்தகங்களால்  வீட்டுக்குள் நடக்கும் சச்சரவுகள் என, பல வற்றை இந்தப் புத்தகம் பேசுகிறது.- சையது