
காற்று, மழை, மின்னல்
காக்காய், பூனை என்ற
இவ்வைந்து பொருளில் கவிதை- என
இட்டார் எமக்கு ஆணை
காகிதம், பேனா எடுத்து
கற்பனைக் குதிரையைத் தட்டி
கவிதை புனையத்துணிந்தேன்
கைகூடுமா எந்தன் எண்ணம்?
“காற்று” சுகமாய் வீச
கண்மூடி அதையும் சுகித்து
“மின்னல்” போல் (கவிதைக்) கரு வருமோ
ஜன்னல் வழியே பார்த்தேன்
“காக்கையா” “காற்றா” எழுத- என
மதில் மேல் “பூனை” போலே
மனம் இரண்டு பக்கமும் தவிக்க
சொற்கள் தேடி அலைந்தேன்
அட போய்யா! ஏன் இந்த அவஸ்தை
ஆறரை மணி (கவிதை) அரங்கம் போனால்
கவிதை “மழை”யாய்க் கொட்டுமே
ரசிக்க எனக்கது போதுமே!
