
முன்பு புங்கை மரத்தை வரைந்துகொண்டு இருந்தேன்.
இப்போது ஒரே ஒரு புங்கை இலையை மட்டும்.
முன்பு மலையை வரைந்து கொண்டு இருந்தேன்.
இப்போது ஒரு கூழாங்கல்லை மட்டும்.
முன்பு சூரியனை வரைந்து கொண்டு இருந்தேன்.
இப்போது வெயிலை மட்டும்.
முன்பு ‘ கடைசி ரா போஜனத்தை’ வரைந்து கொண்டு இருந்தேன்.
இப்போது நீள் மேஜையடிப் பூனையை மட்டும்.
பெரிதெனும் பெரிதெலாம்
சிறிதினும் சிறிதில்.

அருமை
அருமை
கல்யாண்ஜியால் மட்டுமே எழுத முடிகிற கல்யாண்ஜியின் கவிதைகள்.