
எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.
எனக்கு 76 வயது என்பது ஞாபகம் வந்துவிட்டது.
ஆகக் கூடிய உயரம் கை உயர்த்தி அதைப்
பறக்கவிட்டேன்.
தட்டான் கால்களிலிருந்து விழுந்து
கொண்டிருந்தது
இலந்தம் பழம் போலக் கனிந்து
சுருங்கின ஒரு 76.
