தூறல்/சுரேஷ் ராஜகோபால்

கதிரவன் சிரிக்கும் வானத்தில்
அங்குமிங்கும் வெண் மேகங்கள்
வானம் சாந்தமாகவே இருந்தது
குளிர் காற்று மட்டும்
லேசாக வீசியது.

கீழ் வானில்
கனமான இடியோசை
வெண் மேகங்களைக் கரு மேகங்கள்
வேகமாக மறைத்தன

வெளிச்சம் மங்கியது
நல்ல மழைக்கு
அச்சாரம் போட்டது
போலே இருந்தது.

“தூறல்” தொடங்கியது, தொடர்ந்தது
சாலையில் வாகனங்கள் வேகமெடுத்தன
எதிர்பார்த்த கனமழை வரவேயில்லை,
தூறல் மட்டுமே தொடர்ந்தது.