தலையாட்டும் பொம்மை/ம.சக்திவேலாயுதம்

எனையழைத்தவள்
புன்முறுவலோடு
சில கட்டளைகளிட்டாள்…

அடிக்கடி என்னை
எழுதாதே என்றாள்…
சரியென்றேன்!

அடிக்கடி என்னை
எழுதென்றாள்
அதற்கும் சரியென்றேன்!

எல்லாவற்றிற்கும்
சரி என்கிறாயே..எனக்கேட்க..
உன் கேள்வி தவறென்றேன் நான்!

யோசித்தவள்…
கேள்வி சரிதானேயென்றாள்…
சரிதான் என இழுத்தேன்!

உடனே அவள் பார்வையில் பட்டது
தஞ்சாவூர் பொம்மையொன்றும்…
சரிசரியென்ற நானும்!