
நான் முதலில்
சந்தித்தபின்
காதலிக்கிறேன் என்று
சொல்லவில்லை
அவளும் அப்படிச்
சொல்வேன்
என்று எதிர்பார்க்கவில்லை
அவளுக்குத்
திருமணம் செய்து முடித்து விட்டார்கள்
அவள் வீட்டில்
நான் கண் கலங்கவில்லை
அவளும்தான்
இப்போதோ
விதவையாகித்
தனி வீட்டில் வசித்து
வருகிறாள்
அன்று
போனபோது
அவள் செலவுக்குப்
பணம் கொடுத்து விட்டு
வந்தேன்.
அவள் காப்பி கொண்டு
வந்து கொடுத்தாள்
அப்போது
தோன்றியது
அவள் இன்னும் இளைத்துப் போயிருந்தால்
எவ்வளவு
நன்றாக இருக்குமென்று
