45வது புத்தகக் காட்சி/அழகியசிங்கர்

துளி 243


நாளை  45வது புத்தகக் காட்சி ஆரம்பமாகிறது. இந்த முறை விருட்சம் கலந்து கொள்கிறது.  எல்லோரையும் வரவேற்கிறேன். 

விருட்சம் புத்தக ஸ்டால் எண் 17.

முதல் வரிசையில் கடை எண்17 இருக்கிறது. 
 
மேலும் எண் கணிதப்படி ஒன்றாம் எண்ணும் ஏழாம் எண்ணும் சிறப்பான் எண்கள்.  ஆனால் கூட்டு எண்ணிக்கை 8 வருகிறது.  அதுதான் கொஞ்சம் உதைக்கிறது.

முதல் வரிசையில் புத்தகம் வாங்க வேண்டுமென்று நினைப்பவர்கள், கடைசி வரிசைக்குச் செல்லும்போது சோர்ந்து போய்விடுவார்கள்.
கடைசி வரிசையிலிருந்து வருபவர்கள் முதல் வரிசைப் புத்தகங்களைப் பார்க்காமல் போய்விடுவார்கள்.

எப்படியும் போகிறவர்கள் இருப்பார்கள். விருட்சம் மீது அன்பு கொண்டவர்கள்.  பார்க்க வருவார்கள்.  எல்லோரையும் வரவேற்கிறேன்.  

4 Comments on “45வது புத்தகக் காட்சி/அழகியசிங்கர்”

  1. கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இலக்கிய சிந்தனைக் கூட்டத்திற்காக, AVM ராஜேஸ்வரியில் விருட்சம் ஸ்டாலில் அமர்ந்து ஒரேயொரு புத்தகம், அதுவும் திரு.ப.லட்சுமணன் அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து, அவர் இலவசத்தை மறுத்து, அதற்கான விலையைக் கொடுத்து வாங்கிக் கொண்டதும் மறக்க முடியாதது.

    இத்தனை வருடங்களில் விருட்சம் நிஜமாகவே வளர்ந்து இருக்கிறது. சமீபமாக சில வருடங்களில் அசுர வளர்ச்சி.

    இதில் அழகிய சிங்கர் என்ற தனி மனிதரின் அசாதாரண முயற்சியும், அவர் மீது உண்மையான அன்பு கொண்ட அவரது நண்பர்களின் பங்களிப்பும் தவிர வேறெதுவும் பெரிதாக இருக்க முடியாது.

Comments are closed.