
புத்தகங்கள் படித்து
புத்தனாகலாம்
தெளிந்தஓடை மனதில்…
படித்தவனெல்லாம்
புத்தனாயென்றால்
கேள்வி விடையறியாத்திசையில்…
படிப்பிற்கும்.பண்பிற்கும்
தொடர்பென்பது..
பூமி..வானத்தொலைவில்..
வரவேற்புஅறையில்
புத்தக அடுக்குகள்
அறிவைத்தருவதில்லை…
எல்லாம்தெரிந்த
ஞானப்புலிகள்
யாரும் இங்கு இல்லை..
தனக்குள் இருக்கும் அறிவை
புத்தகங்கள் தானேபுகழ்ந்து
கொள்வதில்லை…
நல்லபுத்தகம் படிக்கப்படாமல்
காத்திருக்குது உலகில்..
படிப்பவரை நம்பி
தினமும்பிறக்குது
புத்தகம் பலவடிவில்.
புத்தகம் போட்டு
கைப்பொருள் இழந்த..தியாகம்
கணக்கில் இல்லை.
புரட்டப்படாத
புத்தகவரிசையில் நான் இன்னும்
இடம்பெறவில்லை.
