
அதிகாலைத் தேநீர்க் கடையில்
இடக் கை நீட்டி
யாசித்து நிற்கிற தாடிக்காரர்
சற்று மனநிலை பிறழ்ந்தவர் –
தெரியும்.
வலக்கை விரல்களில் அவர்
ஏந்தியிருப்பது
வக்கீல் ஐயா வீட்டு
வளர்ப்புப் புறா ஒன்று உதிர்த்த
புத்தம் புது இறகு –
தெரியும் அதுவும்.
தெரியாதது
நீங்களோ நானோ
குனிந்து பொறுக்காத ஒன்றை
அவருக்கு எடுத்துக் கொள்ளத் தோன்றிய
அற்புதம் குறித்து.

நன்றி அண்ணா இனி இது போன்ற அற்புதங்களை நாங்கள் தவற விடமாட்டோம்
‘தெரியாதது…….’ என் என ஆரம்பித்து படித்து முடிக்கும் போது மாயம் ஒன்று நிகழ்கிறது மனசுக்குள்.