கடந்த வருடம் கொரானா/வாசுதேவன்

கடந்த வருடம் கொரானா இரண்டாவது அலையில் பலர் உயிர் இழந்தார்கள்.
பலருக்கு வேலை பறிபோனது. எனக்கு தெரிந்த நலிவடைந்த ஒருவரின் வேலை போய் நடுத்தெருவில் நின்றார். இரண்டு பெண் குழந்தைகள். படிப்புக்கு கட்டணம்கட்ட வழியில்லை. படிப்பை நிறுத்த முடிவு செய்தார். இது என் கவனத்திற்கு வந்தது.

ஒரு சிறிய குறிப்பை முகநூலில் எழுதினேன். அந்த அற்புதமான மனிதர் ரூ 50,000 நேரிடையாக பாதிக்கப்பட்டவருக்கு அனுப்பி அந்த பெண் குழந்தைகளை படிக்க வைத்தார். புதுமைப்பித்தன் சிறுகதை தொகுப்பு மலிவு விலை (ரூ 100) பதிப்பைப் பற்றி எழுதினேன். உடனடியாக ரூ 10,000 செலுத்தி புதுமைப்பித்தன் தொகுப்பை வாங்கி தன்னுடைய நாட்டில் உள்ள நூலகங்கள் / பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார். போனவார‌ம் நண்பர் ரமேஷ் பிரேதன் ஆபத்தான கட்டத்தில்
அவசர சிகிச்சையில் இருந்தபோது நண்பர்கள் மூலம் என்னை தொடர்பு கொண்டார். அடுத்த நாள் என்னிடம் நேரிடையாக தழுதழுத்த குரலில் பேசினார். கடுமையான பொருளாதார சிக்கல். நண்பர்களோடு சேர்ந்து ஏற்கனவே வசூலித்து கொடுத்ததால் எனக்கு பலத்த தர்ம் சங்கடம். அந்த கடவுள்தான் நினைவுக்கு வந்தார். தயங்கி உள்டப்பியில் ரமேஷின் நிலைமையை விவரித்தேன்.

எந்த தயக்கமும் இன்றி ரூ 50,000 உடனடியாக அனுப்பி வைத்ததோடு, அடுத்த ரூ 50,000 அடுத்த மாதம்அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். அந்த அன்பரை நேரில் சந்தித்ததில்லை. பேசியதில்லை. அவ்வளவு நெகிழ்ச்சியோடும் கை கூப்பி வணங்குகிறேன். அவர் தன்னை முன்னிருத்த விரும்பவில்லை.
அவர் அனுமதி இல்லாமல் பெயரை குறிப்பிடுவது அறமற்ற செயல். ஆகையால் அந்த கடவுள் யார் என கேட்க வேண்டாம். எனக்கு முகநூலில் வாயிலாக கிடைத்த மிகச்சிறந்த நண்பர்களில் அவரும் ஒருவர்.

என் வார்த்தைக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும் என்னால் நம்பமுடியவில்லை.
என் எழுத்தை வாசித்து என்னை மதிப்பீட்டுள்ளார் என்பது அவருடைய முதிர்ச்சியையும் திறமையையும் கண்டு வியக்கிறேன். மிகச்சிறந்த மனிதாபிமானி. இலக்கிய ஆர்வலர். சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

புத்தகக் கண்காட்சி முஸ்தீபுகளில் அவரவர்கள் தங்களை முன்னிருத்தும்போது அவரும் என் நட்பில் இருக்கிறார்.அமைதியாக இருக்கிறார். பல நேரங்களில் இந்த மெய்நிகர் வெளியின் போக்கும் அக்கப்போரும்சலிப்பூட்டி அடிக்கடி வெளியேறுவேன். ஆனால் அவரைப் போன்றவர்களால்தான் நான் இங்கு இருப்பது
மட்டுமின்றி வாழ்க்கையின் மேல் நம்பிக்கையும் பிடிப்பும் கூடி வருகிறது.

One Comment on “கடந்த வருடம் கொரானா/வாசுதேவன்”

Comments are closed.