மனிதன் நெஞ்சில் ஈரம்/- அதிரன்

மனிதன் நெஞ்சில் ஈரம்
இருக்கும் வரை
இந்த மண்ணில் ஈரம்
இருக்கும் என்கிறார்கள்

இன்று
இரண்டுமே குறைந்து கொண்டே
வருகிறது ….
அதை எண்ணி கண்ணீர் வடிக்கலாம்
என்றாலும்
ஈரம் இல்லை வறண்டு போன கண்களில்.