சுடர் ஏற்றும் கர்த்தா/எம் டி முத்துக்குமாரசாமி

நான் இப்போதெல்லாம்
ஒரு கணத்தின்
அனுக்கிரகத்திற்கு காத்திருக்கிறேன்
அந்த கணத்தில்
எங்கோ எப்போதோ தோன்றிய ஒரு
நடசத்திரத்தின் ஒளியும்
இங்கே இப்போது ஏற்றிய
அகல்விளக்கின் சுடரும்
அசையாப் பொன்மணியாய்
சங்கமிக்கும் எனத் தெரியும்
எது தெரியாதென்றால்
பருவம், பொழுது, வேளை
என்றெல்லாம் இருக்கும்
காலப்பகுப்பில்
இன்ன சந்தர்ப்பத்தில்
இன்னார்தான் இந்த இடத்தில்தான்
சுக துக்க சுழல் சக்கரத்தின்
சுடர் ஏற்றும் கர்த்தா என்பதுதான்

One Comment on “சுடர் ஏற்றும் கர்த்தா/எம் டி முத்துக்குமாரசாமி”

Comments are closed.