
“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகர் நீர்ப்
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்புங
வானம் உரைத்து விடும்”
விளக்கம்:
- தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான்.
- ஒருவன் மன விருப்பத்தை அவன் முகமே காட்டிவிடும்.
- வயலின் தன்மையை உழவன் அறிவித்து விடுவான்.
- நிலத்து மக்கள் இயல்பை அந்திலத்தில் பெய்யும் மழை அறிவித்து விடும்.
