துளி 246

ஜே.எஸ் ராகவன் இறந்து விட்டார்../அழகியசிங்கர்


யார் இந்த ஜே.எஸ்.ராகவன்?  நான் வசிக்கும் மாம்பலம் பகுதியில் முக்கியமான நகைச்சுவை எழுத்தாளர். விருட்சம் இதழில் நகைச்சுவை ததும்பக் கட்டுரைகள் இல்லையே என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு. தற்செயலாய் ஒரு முறை மாம்பலம் டாக்கில் ஜே.எஸ் ராகவன் கட்டுரைகளைப் படித்தேன். அசந்துவிட்டேன்.  நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கட்டுரை. உடனே அவர் எழுத்தை விருட்சத்தில் ஏற்ற வேண்டுமென்று தோன்றியது. கடுகு என்ற எழுத்தாளருக்குப் பிறகு நான் மதிக்கும் நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவன்தான்.  பின் அவர் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து அவர் எழுத்தை விருட்சத்தில் பிரசுரம் செய்கிறேன் என்று குறிப்பிட்டேன். அவர் என் கையில் அவர் எழுதிய புத்தகத்தைக் கொடுத்தார். எளிமையான மனிதர்.  அவரும், அவர் மனைவியும் வசித்து வந்தார்கள். முகநூலில் அவர் பதிவுகளைப் பார்ப்பேன். ஓவியர் அர்ஸ் ஓவியங்களுடன் அவர் முகநூலில் தன் நகைச்சுவைக் கட்டுரையைப் பதிவு செய்து கொண்டிருந்தார்.  அவற்றை எடுத்து என் விருட்சம் டெய்லி  இணைய இதழில் பதிவு செய்வேன். நேற்று கூட மாம்பலம் டாக்கில் வர உள்ளது என்று ஒரு நகைச்சுவை கட்டுரையைப் பதிவு செய்திருந்தார். புத்தகக் காட்சி மும்மரத்தால் என்னால் அதைப் பதிவு செய்ய முடியவில்லை.   இன்று காலை பா.ராவிடமிருந்து தொலைப்பேசி.  ஜே.எஸ் ராகவன் இறந்து விட்டார் என்ற தகவலைக் கூறினார். யாரும் அவர் இடத்தை நிரப்ப முடியாது என்பது உண்மை.

3 Comments on “துளி 246”

  1. ஜே. எஸ். ராகவன் இறந்து விட்டாரென்ற செய்தி கேட்டு அதிர்ச்சி யாகவும்
    வருத்தமாக வும் இருக்கிறது.
    இனி அவர் புதிதாக எதுவும் எழுத மாட்டாரென்பது
    நகைச்சுவை எழுத்துகளை
    விரும்புபவர்களுக்கு
    பெரிய இழப்பு.

    அவர் ஆன்மா சாந்திடையட்டும்.

    ஜான்னவி

  2. நானும் படித்திருக்கிறேன். என்னைப் போன்ற எத்தனையோ மனிதர்களை சிரிக்க வைத்திருக்கிறார். தங்கள் வருத்தத்தில் பங்கு கொளகிறேன்😞🙏🏼

Comments are closed.