
வானம் நீலம்தான் ஆயினும்
அதில் இருளும் ஒளியும்
மாறிமாறி வந்திடுமே,
ஒளிரும் கதிரவன் கருணையால்.
அவன் அருளால் மழை வருமே
குளம், ஆறு, கடல்தான் நீராதாரம்
நீரும் காற்றும் வளங்களைத் தருமே,
இலைகள் செடியில் பசுமை தருமே.
பசுமை போர்த்திய பூமி அதில்
சரிந்து விழும் பள்ளத்தாக்குகள்
உயர்ந்து வரும் மலைகளை
எல்லாம் வனங்களின் சாம்ராஜ்யம்.
இடையே சமவெளிகள் பாலைவன சோலைகள்
பச்சை இலைகளோடு குலுங்கும் வயல்வெளிகள்
காற்றில் சுகந்தம் வீசும் பசுமை
பயிரினம் நகராது நின்று வாழ்பவையே.
பசுமையை உண்டு வாழும்
நடப்பன, பறப்பன எல்லாம் அடங்கும்
கரையில் அலையும், நீந்தும் மீனினம்
ஊர்வன எல்லாம் பசுமையில் அடக்கம்
