
பரிச்சயமற்ற பிறிதொரு நிலவு
தேவாலய மணிச்சத்தத்தின் ஊடாக
உதித்துக்கொண்டிருக்கிறது
இந்த முன்னிரவு
புன்மைகள் சிதறும் மனதை
நீ கழுவிப் போ
ஒளியின் தீர்த்தமே!
தாரகை கூட்டத்தில் நானொரு தாரகையாகி
ஒளிந்து கொள்கிறேன்
சிறிது நேரம்
முதுமைகள் சுமந்துவரும் காலம்
திரும்பி போகட்டும் சூன்யத்திற்கே
விரல்களாடு விரல்களை
கோர்த்துக்கொள்வோம் சகியே
இன்னும் சற்று நேரத்தில் இவைகள்
மழை மேகமாக பொழியப் போகின்றன
இருந்திருந்தார் போல் வீசும்
இந்த தென்றலும் கூட
நம்மை கனிய வைப்பதற்கு வந்ததுதான்
வா இரணங்களின் திடமாய்
உருக்கொண்டுவிட்ட வாழ்வை
இயற்கையின்முன்னிலையில்
உள்ங்கையில் ஏந்துவோம்
ஈரக்காற்று பட்டு
அது கற்பூரம் போல்
கரைந்து போகட்டும்
