
மிகப் பெரிய பட்டாம்பூச்சியைப்
பார்ப்பதற்கு
இத்தனை காலம்
இவ்வளவு தூரம்
பயணப்பட்டு வந்துள்ளேன்….
அதன் சிறகே உடலாக
உடலே மிதக்கும் எழிலாக
உதிர்கின்ற வண்ணத்தைத்
தொட்டுப் பார்க்க
நீளும் என் கரங்களின்
வாசனையை அறிந்து
அருகில், மிக அருகில் வந்தது
ரூமியிடம் சொல்ல
அதனுடைய நீலத்தை
எடுத்துச் செல்கிறேன்
