முத்திரை/கவிதைக்காரன் இளங்கோ


*
தகுதியற்ற தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட இழிவுகளை
நாம் எட்டியிருக்கக் கூடும்

இருளுக்குள் இருந்து உற்று நோக்குகிறது
தயவு

கொச்சையாக்கப்பட்ட வாழ்வின் சாரம்
அண்டிபிழைப்பதில் உள்ள ருசியை
இன்னுமொரு சந்தர்ப்பமென பரிந்துரைக்கிறது

ஒவ்வாத முடிவுகளோடு இடமும் வலமுமாக
குறுக்கிடும் அகாலங்களோ
கட்டளைகளின் முன்தயாரிப்பில்
அனைத்து கோப்புகளையும் கடந்திருக்கலாம்

ஒரு சிறிய அவநம்பிக்கை போதுமானதாக
இருக்கிறது
சாவின் வாசனையை முகர்ந்தபடி
அப்படியே செத்துவிட