
என் வாழ்வில்
எத்தனைப்
பெண்களை
நான் சந்தித்திருக்கிறேன்!
மிக மிகக் குறைவான
எண்ணிக்கைதான்
அது.
பேசாமல் நான்
சந்தித்த பெண்கள்
ஏராளம்
எங்கள் தெருவில்
நடமாடும் பல
பெண்களைத் தற்செயலாக
நான்
பார்த்திருக்கிறேன்
ஆனால்
பேசியதில்லை

சிலர்
என்னைப் பார்த்தவுடன்
சிரிப்பார்கள்
நானும்
சிரித்து வைப்பேன்
பெண்களை வம்புக்கிழுக்கும்
ஆண்களும்
ஆண்களை மாட்டிவிடத்
துடிக்கும்
பெண்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்
உலகில்
பெண்கள் படும்
துயரங்களை வார்த்தையால்
சொல்லி விட முடியாது.
என்ன இருந்தாலும்
மகளிர் தினத்தை
முன்னிட்டு
எல்லோரையும்
வாழ்த்துகிறேன்.
