
வாய்தன் முன் இறந்திடுவேன்
ஒரு பெண் முத்து கோக்கப்பட்ட புல்லாக்கு என்ற மூக்கணியை அணிந்து கொண்டுள்ளாள். அதை அழகாக வருணிக்கும் பாடல் இது. முத்தானது அப்பெண்ணின் பற்களின் அழகிற்குத் தோற்றுப் போய் அந்தப் பற்கள் வாழும் வீடான வாயின் முன்னே தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கியது போல் இருந்தது அவள் மூக்கணி. சிவப்பிரகாச சுவாமிகளின் அந்த அழகான பாடல் இங்கு.
“தன்னை நிந்தைசெய்
வெண்நகை மேல்பழி சாரமன்னி ஆங்கது நிகர்அற
வாழ்மனை வாய்தன்முன்இ றந்திடு வேன்என
ஞான்றுகொள் முறைமைஎன்ன வெண்மணி மூக்கணி
ஒருத்திநின் றிட்டாள்”
