துளி 248/அழகியசிங்கர்

ஆரபியின் ஓவியங்கள் தொடருகின்றன….

அமெரிக்காவிலிருந்து வந்த ஆரபி சரியாக ஒரு மாதம் இருந்தாள்.  ஆரம்பத்தில் எங்களுடனேயே இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆனால் முடிவில் முதலில் பீனிக்ஸ்தான் போக வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தாள்.
அவள் அலட்சியமாக வரைந்த ஓவியத்தை நான் முகநூலில் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு எல்லோருடைய பாராட்டையும் பெற்றேன்.  
எப்படி அவளுக்கு இதுமாதிரி ஓவியம் வரைய முடிகிறது ஆச்சரியம்தான்.  சென்னையில்தான் ஓவியம் வரைந்தாள். 
பீனிக்ஸ் போனபிறகு ஓவியம் வரைய வற்புறுத்தினேன். மடமடவென்று பல ஓவியங்கள் வரைந்து விட்டாள்.
இதோ வியப்படைய வைக்கும் அவள் ஓவியம்.

3 Comments on “துளி 248/அழகியசிங்கர்”

  1. என்ன ஒரு talented குழந்தை! ஒரு 6 வயது
    குழந்தை இவ்வளவு நன்றாக வரைவது நாளைக்கு ஆரபி ஓவியராக மிக பிரசித்தி
    பெறப் போவதற்கு அறிகுறியாக இருக்கலாம்,
    ஓவியக் கலையை முனைப்புடன் பயின்றால்
    சிறந்த ஓவியராக உலகப் புகழ் பெறுவது சாத்தியமே,
    ஆரபிக்கு அன்புடன்
    வாழ்த்துக்கள்!

  2. சொன்ன பிறகும் நம்ப முடியாத அளவுக்கு அபாரமான ஓவியம். 6 வ யது சிறுமி வரைந்து இருக்கிறாள் என்பது பாராட்டப் பட வேண்டும்.( திருஷ்டி சுற்றிப் போட ச் சொல்ல வேண்டும்).

Comments are closed.