சில கவிதைகள்/ ஜான்னவி

மலைச்சரிவிலி ருந்து
பெருகி வரும் காற்று
பொழிகிறது என்மேல்
மலர்களையும்
இலைகளோடு
முட்குச்சிகளையும்

     🦋🦋🦋

அடர்ந்த வனத்தை
ஊடுருவும் காற்று
முணுமுணுக்கும்
மரங்கள்.

     🦋🦋🦋

யாருடைய கனவோஇந்த நிலவு
எல்லோரும்
கண்டு
கொண்டிருக்கிறோம்,

   🦋🦋🦋