நான்மணிக்கடிகை/மா கோமகன்

“நீரான் வீறு எய்தும் விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டதைதால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர், மன்னவர், கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும்”

விளக்கம்:

  1. விளைநிலம் நீர் பாய்ச்சுவதால் செழிப்படையும்.
  2. துறைமுகப் பட்டினங்கள் கடல் வளத்தால் பெருமை அடையும்.
  3. மன்னர் தாம் ஆளும் நாட்டினால் சிறப்படைவர்.
  4. பாட வல்லவனால் நாடகம் சிறப்படையும்.