இக்கணம் இலக்கணம்/வவேசு

கம்பீரமான மழைக்கு
முன்னோடி சாரல்
அரவணைப்பின் விரல் வருடல்:
தொந்திரவு செய்யாதே எனச்
சொல்வது போல்
எட்டிப் பார்த்து விடைபெறும் தூறல்;
பெண்ணே ! நீயோ !
சில நேரம் இடையினம்
பலநேரம் வல்லினம்
மழையிடம் தமிழ் கற்ற
மங்கை நீயோ !
இக்கணம் இலக்கணம்

2 Comments on “இக்கணம் இலக்கணம்/வவேசு”

  1. இக்கணம் ஒரு கணம் இலக்கணமே மாறுதோ!
    மெல்லினம் வல்லினமானதே மீறலோ!
    விரல் நுனிகளில் தெறிக்கும் மழையே முத்தாகி நகமாய் உறைந்ததோ – நும் கவிதை
    தேறலாய் மனதில் உறைந்தது -சிறு
    கீறலாய் மின்னிப் புதைந்தது!

Comments are closed.