எஸ்.சண்முகம் கவிதை

இல்லத்திற்குள் நின்றபடி பார்த்தால்
வாசல் கதவுகள் சாளரங்கள்
அறைக்கதவுகள் எல்லாம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன
வெளியெ நின்று பார்த்தால்
வாசல் கதவு சாத்தப்பட்டுள்ளது
ஆனால் பூட்டப்படவில்லை
சரி பேசிப் பார்ப்போமென்றால்
வெளியே ஒருவரும் புலப்படவில்லை
இல்லத்துள் நுழைந்தால் எல்லோரும் இருக்கின்றனர்
சுவர்களில் மரச்சட்டகத்துள் உள்ளோர் உட்பட
அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்
என் உச்சி அமைதி சூடியுள்ளது
உடனிருத்தலின் பெண்குரலொன்று
ஒரு நீரலை போலும் மேல்விழுந்தது
இல்லமும் வெளிப்புறமும் முன்போல் நிலைகொள்ள
ஆரம்பிப்பித்து விட்டன.