
மணியோசை ஒலிக்கிறது
லாந்தர் ஒளி ஒளிர்கிறது
வண்ண வண்ணக்
கண்ணாடிக் கூண்டுக்குள்
சுவையான
இனிப்பு வகைகள்
வண்டிக்காரன்
மணி ஒலிக்கிறான்
குழந்தைகளின்
கண்களும் நாவுகளும்
பலகாரங்களில் மொய்க்கின்றன
கையிலுள்ள துணியால்
அவைகளைக் துரத்த
வீசிவீசிப் பார்க்கிறான்
ம்ம்..கூம்…முடியவில்லை..
வண்டியை நகர்த்துகிறான்
லாந்தர் ஒலி மங்குகிறது
மணியோசை தேய்கிறது.
🦀
