
திருவருட்பா….
தடைகள்
வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய்
விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி
ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால்
ஒரு தடையும் இல்லை…இருந்தும் துறவறம் மேற்கொள்ளவில்லை. அவருக்கே
தெரியவில்லை ஏன் என்று. இப்படி தடை சொல்லி சொல்லி பழகி வேலை செய்யவே
முடிய மாட்டேங்குது. என்ன செய்வேன் என்ன செய்வேன் என்று புலம்புகிறார்.
வள்ளலார் துறவிதான். இப்படி உலகம் இருக்கிறதென்று தன்னை கற்பனை பண்ணிச்
சொல்கிறார் அடிகளார்.
தாய்தடை என்றேன் பின்னர்த்
தாரமே தடைஎன் றேன்நான்
சேய்தடை என்றேன் இந்தச்
சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
தோய்தடைச் சிறியேன் இன்னுந்
துறந்திலேன் எனைத் தடுக்க
ஏய்தடை யாதோ எந்தாய்
என்செய்கேன் என்செய் கேனே.
தடைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். தடையே இல்லாத போதுதான் வேலை
செய்வேன் என்று நினைத்து இருந்தால் ஒரு நடக்காது. அது மட்டுமல்ல ,
எல்லா தடைகளும் விலகினாலும் எப்படி வேலை செய்வது என்று தெரியாது. ஏன்
என்றால் இதுவரை வேலை செய்து பழகவில்லையே….
அலை ஓய்ந்த பின்தான்..வேலையை தொடர்வேன் என்றால் என்றுதான் முடியும்?
ஆகவே, தடைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்….வேலையை ஆரம்பியுங்கள்.
வெற்றி உங்களுக்கே
-

அருமை. சுழல் மாறாது. நாம் மாறலாம்…அது நம் கையில்.