
பார்வையில் வானத்தில் ஒரு கூண்டு தயாரிக்கிறாய்
வெறித்துக் கிடந்த விழிகளில் ஒரு பறவையும் தென்படவில்லை
ஆனால் கருவிழிக்குள் இறங்கிய ஊசி நான் தனிமை என்றது
வெறுமையின் பிதற்றல்களில்
பறவைகளின் பலப் பல பெயர்கள்
துயரங்களைப் பாடும் கடவுளே
இன்று அகதி தான்
வா நீயும் அவரது தோள்களில் சாய்ந்து கொண்டு விசும்பு
அவரும் இரு கரங்களை வலைபோல்
விரிக்கிறார்
ஒன்றையாவது சொந்தமாக்கி கொள்ள
அவரிடமும் ஒரு பறவையும் வராது
பறவையை நேசிப்பவன்
ஒரு போதும் உறவு கொண்டாடுவதில்லை என்பதை
அவரும் அறிந்திருக்கவில்லை
