தொகுப்பு: பிரதீப் குமார் திருமலை அரசன்

இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லை. ஸ்வேதாவுக்கு ஆம்லெட் கொடுக்கும் போது, அவள் சீருடைக்கு இஸ்திரி போட வேண்டியிருக்கும் போது, வாசல் மணி அழைக்கும் போது ஃபோன் தொணதொணக்க.
“ஃபோனையாவது எடுக்கக் கூடாதா? காலைல எத்தனை காரியம் ஒருத்தி செய்ய முடியும் ” என்று ஹாலில் பேப்பரில் மறைந்திருந்த கணவனைக் கேட்டாள்.
“உங்களுக்குத்தான்”
“இல்லைன்னு சொல்லிடு” என்றான் சதீஷ்
“காலை வேளையில் பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லை.”
“பொய் சொல்ல வேளை பார்க்கக் கூடாது சாவித்ரி.”
மீண்டும் கதவு மணி ஒலிக்க கணவன் பெரிய மனது பண்ணி திறக்க சம்மதித்து, “சாவித்ரி பேப்பர்க்காரன்” எல்லாக் காரியமும் சாவித்ரியைச் சுற்றித்தான் “இன்னிக்கு இல்லைப்பா, ஏம்பா உம் பொஞ்சாதியை வீட்டு வேலைக்கு வரச் சொன்னேனே”
“ஆறு வூட்ல செய்றாம்மா. சி.ஐ.டி காலனில் ஒரு வூட்டை விட்ட பறம் ஒண்ணாந்தேதி வர்றதா சொன்னாங்க”
“ஒண்ணாந்தேதியா? அது வரைக்கும் எப்படிப்பா சமாளிப்பேன்.”
“என் தங்கச்சி அல்லாட்டி தம்பி சம்சாரத்தை வேணா கேட்டுப் பார்க்கறேன் பேப்பர் இல்லிங்களா?”
” இருக்குப்பா எடுத்து பார்த்து போட எனக்கு எங்க அவகாசம் ?”
“அய்யா ?”
“அய்யாவா “என்று ஏளனமாக
“அய்யா பேப்பர் போட்டுட்டா மழை வந்துரும்பா இருக்கற பேப்பரை சரியா மடிச்சு வெச்சாலே பாக்யம்.”
சதீஷ் ஸ்போர்ட்ஸ் பேஜை முடித்துவிட்டு குறுக்கெழுத்துப் பக்கத்தை நாலாக மடித்துக் கொண்டான்.
“என்ன என் தலையை உருட்டியாறது.”
“அய்யா எல்ப் பண்ணுவாரான்னு கேக்கறான் பண்ணுவாரே கெடியாரத்துக்கு சாவி கொடுப்பார்ன்னேன்”
எல்லாமே செல்லமான கோபங்கள் தான் சாவித்ரிக்கு. இந்த அதிகாலை டென்ஷன் பிடிக்கும். ஆனால் வேலைக்காரி வராத தவிப்புத்தான்.
“டூ மச்”
“உனக்கு வேலைக்காரி வரலைன்னா எம்மேல பாயற.”
“உங்க மேல யார் பாஞ்சா? கொஞ்சமாவது ஒத்தாசை பண்ணா சரி இன்னிக்கு லீவுதானே?” “இல்லை ஆபிஸ் போகணும். வீடு பெருக்கணுமா.”
“அதெல்லாம் வேண்டாம், மேசை மேல இருக்கற லெட்டர்ங்களை ஒழுங்கா பொறுக்கி வெச்சா போதும் என்னால எல்லா காரியமும் பண்ண முடியாது. பாத்திரம் தேய்க்க முடியறது. துணி தோய்க்கறிதுதான் பெரிய உபத்திரவம். “
அவனுக்கு இரண்டாம் வேளை காப்பி கொடுக்க சதீஷ் சோபாவில் இடம் மாறி உட்கார்ந்துகொண்டு “லெட்மி ஸீ ஒரு நாளைக்கு எத்தனை துணி ஆறு துணியா?” “பதினெட்டு துணி”
“மூணுபேருக்கா?”
“ஆமாம், உங்க டீஷர்ட் டென்னிஸ் ஷர்ட் வாக்கிங் போன ஷர்ட் ஆபிஸ் ஷர்ட் ஸாக்ஸ் ஸ்வேதாவோட யூனிஃபாரம், அப்புறம் அவ சுடிதார் அப்றம் நைட்டி உங்க நைட் ஷர்ட் ரெண்டு செட் புடவை உள்பாவாடை பாடி ரவிக்கை கணக்கு என்ன வரது?”
“கொஞ்சம் கொஞ்சமா தவணை முறைல தோய்க்கிறது”
“அப்படி பண்ணித்தான் மொத்தம் அம்பது துணி சேர்ந்திருக்கு”
“இதுவரை யார் தோச்சுண்டிருந்தா”
“எல்லாம் வேலைக்காரிதான். அப்பப்ப கூடைல போட்டுருவோலம் செட்செட்டா தோச்சு மொட்டை மாடில உணர்ந்திருவா”
“அவ வரலையாக்கும்”
“ஆமாம் , அதான் ப்ராப்ளம்”
“சாயங்காலத்துக்கள்ள சால்வ் பண்றேன்”
“என்னால தோய்க்க முடியும். யாராவது ஒத்தாசை செய்தா போதும். தோச்சதை பிழிஞ்சு உணத்தினா போதும் ஏதாவது”
“எல்லாத்துக்கும் ஒரு வழி பண்றேன்” சதீஷ் போனை எடுத்து டெலிபேலான் டைரக்டரியின் மஞ்சள் பக்கங்களைப் புரட்டி சங்கர் எம்போரிய த்துக்கு போன் செய்தான்.
“ஒரு வாஷிங் மெஷின் எத்தனை இருக்கும்”
“ஸார் டோண்ட் ஒர்ரி எபவுட் தி ப்ரைஸ் சார். அட்ரஸ் சொல்லுங்க எங்க சேல்ஸ்பர்ஸன் வந்து டெமோ பண்ணுவார் அப்றம் விலை பேசலாம். அதுவும் எங்க இன்ஸ்டால் மெண்ட் ஸ்கீம்ல இனிஷியல் பேமெண்ட் சிக்ஸ அண்ரட் கொடுத்தாபோதும் பாக்கியை முப்பத்தாறு..”
“அதெல்லாம் வேண்டாம் இருக்கறதுக்குள்ளயே நல்ல மெஷின் அனப்புங்க டவுன் பேமெண்ட்”
போனை வைத்துவிட்டு “வாஷிங் ப்ராப்ளம் சால்வடு. அப்புறம் என்ன வேணும் டிஷ்வாஷர்? வீடு பெருக்க வாக்வம் க்ளீனர்?”
“நான் அதெல்லாமா கேட்டேன். கொஞ்சம் எல்ப் பண்ணா போதும் நானே எல்லாக் காரியமும் செய்துக்கறேன்னுதானே சொன்னேன். வாஷிங் மெஷினை எல்லாம் எனக்கு இயக்கத் தெரியாது”
“கத்துக்கலாம்மா” என்றாள் ஸ்வேதா
“நீ கத்துக்கயேன் அம்மாவுக்கு எல்பா இருக்கும்”
“நோ வே நான் வாஷிங் மெஷின் இல்லைப்பா கம்ப்யுட்டர்”
“மெஷின் னா பயப்படக்கூடாது எதுக்கும் அவன் வருவான் எப்படி இயக்கறதுன்னு சொல்லித்தருவான்”
கணவன் ஒரு குட்டித்துக்கம் போடச் சென்றதும் சமையலை முடித்துவிட்டு சற்று நேரம் தொடர் பார்த்தாள். அதில் யாரோ பாட்டிலைத் திறந்து விஷம் குடிக்குமுன் கண்ணயர்ந்தபோது சதீஷ் ஓசைப்படாமல் அவளைப் பின்னாலிருந்து அணுகி அணைத்துக் கொள்ள முயன்ற போது திடுக்கிட்டு எழுந்தாள்.
“எதுக்காக நீ கஷ்டப் படணும் ” என்று கணவன் பரிவுடன் அவைள அணைத்துக் கேட்டான்.
“இந்த முறை ஹாலிடே ரிசார்ட் என்ன ஆனாலும் சரி, போயே ஆகணும் ஒவ்வொரு வருஷமும் தவறிப் பேய்ட்றது”
“பரவால்லைங்க ஆபிஸ் வேலை முக்யமில்லையா?”
“என்ன பெரிய ஆபிஸ் தட்டுக் கிடறது? நான் உழைக்கிறேன்னு எங்கிட்ட எல்லா வேலையையும் கொடுத்துட்டடு மற்ற விபி எல்லாம் டார்ஜிலிங் கொடைக்கான்லனு குழந்தை குட்டியோட போய்டறாங்க.”
“அதனாலென்ன.”
“எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு சாவித்ரி கடுமையா உழைக்கிறே உனக்கும் ஒரு ரெஸ்ட் வேண்டாமா? வேணும்னா ஒரு பதினஞ்சு நாள் மாயவரம் போய்ட்டு வாயேன்”
“வேண்டாங்க ஸ்வேதாவுக்கு பாடம் சொல்லித்தரணும் மேலும் எங்க அம்மாவே எதுக்கு வந்தே எதுக்கு வந்தேன்னு தொணதொணத்து மாப்பிள்ளை கஷ்டப்படுவார்னு துரத்தி அனுபிபிருவா. எனக்கு எதும் வேண்டாம் உனக்கு ஒரு ரெஸ்ட் வேண்டாமான்னு கேக்கறிங்களே பரிவோட அதுபோதும் எனக்கு” என்றாள்
“உன்னை ம்யுசியத்தில தான் வெக்கணும் ” என்று அவளைப் பின்பக்கத்திலிருந்து அணைத்து “அழகான ம்யுசியம் பிறவி. என்ன கொஞ்சம் தலைக்கு டை போட்டு ப்யுட்டி பார்லர்ல போய் திருத்தம் பண்ணிக்கிட்டு வந்தா ஸ்வேதாவை உன் தங்கையான்னு கேப்பாங்க எல்லாரும் சாவிதிரி நீ ஏன் உன் தோற்றத்தைப் பற்றிக் கவலைப் படறதே இல்லை ?”
“யாருக்காக நான் அலங்காரம் பண்ணிக்கணும்?”
“எனக்காகத்தான்”
“நீங்க இந்த வெளி அலங்காரத்தினால தான் எம்மேல அன்பா இருக்கிங்களா?”
“சேச் சே நீ என்ன ரூபத்திலயும் எனக்கு அழகானவதான் என்று அவளை மறுபடி முத்தமிட்டுவிட்டு இன்னும் ஒரு காப்பி என்ற போது போன் மணியடித்தது.
“சாவித்ரி ஆபீஸ் போறேன். அந்த வாஷிங் மெஷின் காரன் சேல்ஸ்மன் வருவான் காட்டச் சொல்லு. எனக்காகக் காத்திருக்க வேண்டாம். கொஞ்சம் லேட்டாகும் ஆபிஸ்ல” என்றான். போகும்போது கூட அவளை இன்பமாக மோளில் அழுத்திவிட்டுத்தான் சென்றான். சாயங்காலம் அந்த இயந்திரர் கொடுவரப் பட்டது. வெளிர் நீலத்தில் ஒரு நெற்குதிர்க் குழந்தை போல் இருந்தது பளபளவென்று இரண்டு மூடிகள். அருகே விதவிதமான குழாய் இணைப்புக்கள் தண்ணீருக்காக . டை கட்டின இளைஞன் நாயை,” இந்த டாக் கடிக்கங்களா” என்று கை சொடக்கினான்.
டோன அவனை மாதிரி பார்த்தது.
“கட்டிப் போடறிங்களா?” என்றவனைப் பார்த்துவாலாட்டியது
“நான் ஒரு நாய் நேசன்” என்றான் அவன்
“நீங்க எதுவுமே செய்யவேண்டாம் மிஸஸ் சதீஷ் குமார். இந்த துணிகளை இந்த ச்சூட்டுக்குள்ள போட்டு இந்த பட்டனை இமுக்கினா போதும் இந்த விளக்கு எரியும் . ஃபஸ்ஸி லாஜிக் மைக்ரோப்ராஸஸர் கண்ட்ரோல் ஆறு வாஷிங்ரொக்ராம் பதினெட்டு காம் பினேஷன் அஞ்சு கேஜி துணி போடலாம். ரம்பா வீட்டில் கூட இதே மாடல் தான் உங்க துணிங்களுக்கு தகுந்தாப்பல டைமிங்ஸை தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு முதல்ல ரின்சிங், வாஷிங், ஸ்பின் ட்ரையிங், பை டைரங்கஷனல் ரெண்டு டரைக்ஷன்லயும் பண்ணிட்டு இந்தப் பாருங்க , வெளிய வரப்ப ஏறக்குறைய காஞ்ச நிலையில் வரும் எடுத்து ஒரு உதறு உதறிப் போட்டுக்கலாம் அவவளவுதான் பட்டன் உடையாது, ப்ரைட்னஸ் போகாது. அதும் ‘டிஜிட்’னு ஆப்டிக்கல் ப்ரைட்டனர் சேரத்திங்கன்னா..”
“என்ன விலை”
“பதினஞ்சாயிரம் கூட ஒரு வால் கிளாக் இலவசமா தரோம்” சாவித்ரி அந்த விந்தை இயந்திரத்தை அவன் இயக்க ஆர்வத்துடன் பார்த்தாள். அதிலிருந்து ஆரோக்கியமான சப்தங்கள் வர சற்று நடுங்கிவிட்டுத் தானே நின்றது.
யுவன் விற்பனை விற்பன்னன் தன் டையை தோளில் போட்டுக் கொண்டு முக்கால் வாசி உலர்ந்த பளிச்சென்ற துணிகளை வெளியே எடுக்க சாவித்ரிக்கு ஹைடெக் யுகத்தில் பிரவேசிப்பதில் பெருமையாக இருந்தது. சாயங்காலம் சதீஷ் அலுவலகத்திலிருந்து வரத் தாமதமாகிவிட்டது. அதற்குள் சாவித்ரி வாஷிங் மெஷினைப் பழகிவிட்டாள். வீட்டின் பின் முற்றத்தில் பளபளவென்று எல்லாத் துணிகளும் காற்றில் ஆட அலாவுதீனின் ஜீனி போல அருகில் நின்றது மாடல் நம்பர் டிஆர்ஏ 934.
“டெக்னாலஜி இருக்கறப்ப வீட்டு வேலையெல்லம் பெரிய சுமையே அல்லை சாவித்ரி சப்பாத்தி மெஷின் வந்துடுத்து ரெடிமிக்ஸ் இட்லி மாவு வந்துடுத்து எது வேணும் சொல்லு.”
“எதும் வேணாம் இந்த வாஷிங் மெஷினைவிட எனக்கு ஒண்ணுதாங்க பெரிசு”
“என்ன” அருகில் வந்து களைத்துப் போன முகத்தை நிமிர்த்தினான்.
“உங்க அன்புப் பெண்டாட்டி கஷ்டப் படறாளேன்னு பரிவா ஒரு வார்த்தை சொல்றிங்களே அது போதுங்க எட்டு ஊருக்கு உழைப்பேன்”
“அன்புக்கு என்ன சாவித்ரி? நமக்கு எத்தனை வருசமாச்சு கல்யாணமாகி”
“தை வந்தா பதினஞ்சு”
“இன்னைக்கும் அப்படியே இருக்கே” என்று அவள் மூக்கு நுனியை விரலால் தொட்டான் சதீஷ் “கிவ் மி எ கிஸ்”
“பாக்கித் துணியை தோச்சுட்டு வந்துர்றேன்” சாவித்ரி உள்ளம் பொங்க நிறைந்த சந்தோஷத்தோடு வாஷிங் மெஷினில் போடுவதற்கு கணவன் கழற்றிப் போட்ட சட்டையை எடுத்துச் சென்றாள் கணவனின் சட்டை என்பதே ஒரு கிறக்கத்தை ஏற்படுத்த அன்புடன் அதை முகர்ந்து பார்த்தாள் முதுகுப் பக்கத்தில் லேசான பர்ஃப்யும் வாசைன. நம் வீட்டில் இந்த வாசனை கிடையாதே!
I
IT
Author’s note on this story
When I started writing this story I didn’t have a clue how it was going to develop and end. Popular writers often have to work to deadlines I had a pending request from kalki magazine to send a story I opened the day’s newspaper and saw an ad for a washing machine; the link to the urban housewife was immediately established and after that the story wrote itself I AM NOT RECOMMENDING THIS METHOD TO BEGINNERS Dont forget this method is employed by a person who has 37 years of writing and reading at the back of his mind including such great masterpieces like Katherine Mansfield’s. ‘Bliss’

Master piece!