
ஊறல் விறுவிறுத்து
பால் கட்டிக் கொண்டது
வலி தீர மண்ணில்
பீச்சி விட்டபடி அழுதாள்
பூமிக்குள்ளிருந்து
குழந்தை சிரிக்கிறது
அடித்து நொறுக்கிய போது அமைதியாயிருந்தீர்கள்
ஆணிகள் அறைந்து தொங்கவிட்டபோது
வேடிக்ககை பார்த்தீர்கள்
வெற்றிடத்தில் விசும்பியழுது நினைவுகூருகிறீர்கள்
பயந்து நடுங்குகிறேன்
நீருமில்லை நிழலுமில்லை
எதிர்கால சந்ததி நிலை மனதிலாடுகிறது
ஊனமாகிக் கிடக்கிறது காலம்
உருப்படியாய் எதுவும் நடக்கவில்லை
ஊறுகாயை நக்கிட்டு திரிகிறார்கள்
இசையில் மூழ்கிறார்கள்
கவிதையில் கரைந்தார்கள்
எரியும் உலகம் பற்றி
எவர்க்கும்
கவலையில்லை.
🦀
