எஸ்.சண்முகம் கவிதை

ஒரு குறுகலான சந்து
சாலையை அடையுமிடத்தில்
ஒரு நொடியின் நழுவலாய்
உன்னை தவறவிட்டுவிட்டேன்
அன்றாடம் இதே நேரம்தான்
சந்தின் கடைசிஅடி தன்னை
சாலையின் விளிம்பில் இழக்குமிடம்
கடப்பவைகளின் வேகத்தை காணாததுபோல்
யோசிக்காமல் ஏதோ ஒரு பக்கம் திரும்பி
நடைபயிற்சியைத் துவக்கினேன்
பின்னர்
முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்

இருவரது பெயரும் நொடிதவறவில்லை.

(எண் : 005 )