தமிழில் : க. மோகனரங்கன்

நானொரு நத்தை –
தயவுசெய்து
என்னை அவசரப்படுத்தாதீர்கள்,
அதோ
அந்த செர்ரி மரங்களை நோக்கி
நான் மெல்ல நகர்கிறேன்;
நான் சென்றடைய வேண்டிய
இடம் ஒன்றுமில்லை,
செய்தே தீர வேண்டிய
வேலைகளும் கிடையாது
இந்த வேகமே எனக்கு உவப்பு; நான்
மெதுவாகப் போகவே விரும்புகிறேன்;
இது எனக்கு
நான் கடந்து செல்லும்
பூக்கள் அனைத்தையும்,
புல்லின் இதழ்கள் ஒவ்வொன்றையும்
அறிந்து கொள்வதற்கு,
வேண்டிய நேரத்தை தருகிறது.
நான் ஒரு நத்தை;
இது என் பாதை.
தயவுகாட்டுங்கள்
என்னை அவசரப்படுத்தாதீர்கள், . எமக்கு
இந்நாள் முழுவதும் இன்னும் மீதமிருக்கிறது.

ஆஹா…என்ன ஒரு நிதானமான அவசியமில்லாத வாழ்க்கை. கவனித்து நடக்கவும். மிதித்துக் விடாதீர்கள்.
திருத்தம்: ஆஹா என்ன ஒரு நிதானமில்லாத அவசரமில்லாத வாழ்க்கை. கவனித்து நடக்கவும். மிதித்து விடாதீர்கள்.