தோட்டக்காரன்.!/ஆர்க்கே.!

பூக்களில் கவனம் குவித்தேன்.
தோட்டச் செடிகளை எண்ணிப்பார்த்தேன்.
பிஞ்சு காய் கனி எல்லாவற்றிற்கும்
கவனக்குறிப்பு வைத்திருந்தேன்.
பூக்களுடன் நேசம் பாராட்டிப் போன
அந்த பட்டாம்பூச்சிகள்
பற்றிய குறிப்புகள் மட்டும்
விடுபட்டு விட்டதை
நானறிந்து கொள்ள முடிந்தது–
அவைகளின்
வெளியேற்றத்திற்குப் பிறகுதான்.

One Comment on “தோட்டக்காரன்.!/ஆர்க்கே.!”

Comments are closed.