இளமைக் கதை/தி சோ வேணுகோபாலன்

காலம்
நீண்டு நீள்கின்ற நீளும் நெடுங்கோடு ;
கனவாய்
நிகழ்ச்சியாய்
கதையாய் மாறும்
”நான் ”
ஒரு புள்ளி :
உண்மை !
………..
கண் குத்தும்
கொம்பசைவு,
குழைகின்ற
கொடியழகு
வம்புக் கிழுக்கின்ற
வேளையில்….
கூனலும் கோலும்
காட்டி,
சாத்திரம்
குறி தப்பி வழி மாற
சிரஞ்சீவிக் கதை படிக்கும்!

புள்ளிக்குப் பக்கம்
புள்ளி வைத்தால்
சிரஞ்சீவிதானே !