பெயரிடுதல்/லூசி ப்ரோக்-பிராய்டோ

தமிழில் : க.மோகனரங்கன்


“பெயரிடுவது என்பது
வழிபடுதலின் ஒரு வடிவம் ;
உடமை பாராட்டுதலும் கூட.
என் வாழ்க்கையில்
என்னை நேசித்த அல்லது
என்னால் நேசிக்கப்பட்ட
எவரொருவருக்கும்
இன்னொரு பெயர் இல்லாதிருந்ததில்லை.
ஒரு பெயரிட்டு
மறு பெயர் மாற்றி
வேறு பெயரிட்டதுமுண்டு.
இதனை நான் உயர்வுநவிற்சியாகக் கூறவில்லை.
இது நடந்த உண்மை;
நீங்கள் எதேனும் ஒன்றை கூடுதலாகவும் நெடுங்காலமாகவும் விரும்புகிறீர்கள் எனும்போது ,
அதைச் சுட்டுவதற்கு உங்களிடம் அதிகமான பெயர்கள் இருக்கும்.