
மாயவன் கண்ணன்
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் இப்பாடல் ஒரு சிலேடைப் பாடல் போன்றது. பாடலின் பொருள் மாயவனான கன்ணன் விண்ணுக்கும் மண்ணுக்கும் தாய் போன்றவன். கமலம் போன்ற கண்களை உடையவன். தீய நோக்கு கொண்ட இராவணனை சிரமறுத்தவன். தன் மீது அன்புடையாருக்கு வைகுந்தம் அளிப்பவன்.
இப்பாடலின் இரண்டாம் சீர் நான்கு அடிகளிலும் கண்ணன் என்ற போதும் முதல் அடியில் கண்ணன் என்று பெயர்ச்சொல்லாகவும் இரண்டாம் அடியில் கண் நன் என்று பிரிந்தும் மூன்றாம் அடியில் வன்கண்ணன் என்று இராவணனைக் குறிப்பிடுவதாகவும் நான்காம் அடியில் தூயவன் கண் அன்புடையாருக்கு என்று அவனிடத்தே என்ற பொருளும் தோன்றும் படி வருகிறது
“மாயவன் கண்ணன்
மணிவண்ணன் கேசவன்
மண்ணும் விண்ணும்
தாயவன் கண் நன்’
கமலமொப் பான்சரத்
தால் இ லங்கைத்
தீயவன் கண்ணன்
சிரமறுத் தாண்திரு
வேங்க டத்துத்
தூயவன் கண்அன்’
புடையார்க்கு வைகுந்தம்
தூர மன்றே”
