தாயும்/ ஆர். வத்ஸலா

எந்தன் கலி தீர்க்க வந்தக்
கண்ணே
வயிற்றில் இருக்கையில்
கூட வலிக்காமல்
உதைத்தவள் நீ

சோதனை சூழ்ந்திருந்த
நேரத்தில்
எந்தன் சோகம் கரைக்கப் பிறந்தாய் நீ

என் முகம் வாடினால்
சிணுங்கும்
உன் முகம் கண்டு
துன்பத்திலும் புன்னகைக்கப் பழகினேன்

உத்திரத்தில் ஒரு குழந்தை
போதும் பொறுப்பேற்க
எனும் பழமொழியை
நிரூபித்தவள் நீ

பங்குனி உத்திரத்தில்
தெய்வத் திருமண நாளில்
மகளாய் உதித்த நீ
எனக்கு தாயுமானாய்

18/3/22

One Comment on “தாயும்/ ஆர். வத்ஸலா”

  1. படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
    அழகாக வளர்ந்த செடி மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும் .

    ஆனால் வேரின் வியர்வை கண்ணுக்குத் தெரியாது.

    நல்ல செடியை வளர்த்த வேருக்கும் பாராட்டுக்கள். . வாழ்த்துக்கள்

    ராஜாமணி

Comments are closed.